திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், "திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம்.
சித்த மருத்துவத்தில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். மான் கொம்புகளை கொண்டு உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.
தொடர்ந்து ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த மருத்துவருக்கு மிரட்டல் என புகார் எழுந்துள்ளது.
விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கையை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil