scorecardresearch

“இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு ஜோக்” – எச்.ராஜா

திமுக”வின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ரோடு சைடு தமாஷ் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

“இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு ஜோக்” – எச்.ராஜா

திமுக”வின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ரோடு சைடு தமாஷ் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழை வெறும் பேசு மொழியாக மட்டுமே திமுக மாற்றியுள்ளதாகவும், தமிழின் பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பாஜக மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

திமுக   நிர்வாகிகள் அனைவரும் சி பி எஸ் சி கல்விக் கூடம் நடத்தி வரும் நிலையில், ஏன் சமச்சீர் கல்விக்கூடம் நடத்தவில்லை எனவும்  இந்தி படிக்க வைக்கும் திமுக வின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் முகத்தை எங்கே வைப்பார்கள் என்றும் என்றும் கேள்வி எழுப்பியதுடன் அப்போது  திமுக வின் தமிழ் வேடம் கலைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் வெறுப்பு அரசியலை நடத்துவது தான் திராவிட மாடல் எனவும் தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம் எனதெரிவித்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hindi imposition against protest is a road side joke h raja