"உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள், எங்கள் மாணவர்களுக்கு அல்ல": ஸ்ரீதர் வேம்புவிற்கு தி.மு.க பதிலடி

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, வடநாட்டு வணிக மையங்களுடன் சிறப்பாக ஈடுபடுவதற்கு தமிழ் பொறியாளர்கள் இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரைத்ததை அடுத்து, தமிழகத்தில் இந்தியின் பங்கு குறித்த விவாதம் மீண்டும் வெடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Sridhar Vembu

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, வடநாட்டு வணிக மையங்களுடன் சிறப்பாக ஈடுபடுவதற்கு தமிழ் பொறியாளர்கள் இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரைத்ததை அடுத்து தமிழகத்தில் இந்தியின் பங்கு குறித்த விவாதம் மீண்டும் வெடித்துள்ளது. அவரது கருத்துக்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Teach Hindi to your staff, not our students’: DMK fires back at Zoho CEO over language remark

 

Advertisment
Advertisements

இதற்கு கடுமையாக பதிலளித்த தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை "உங்கள் வணிகத்திற்குத் தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தியைக் கற்றுக் கொடுங்கள். உங்கள் வணிகத்திற்காக தமிழ்நாட்டு மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

வணிகத்திற்கு மொழி அவசியம் என்றால், அதற்கு பதிலாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே அடிப்படை ஆங்கில அறிவை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாதுரை மேலும் வாதிட்டார்.

"அரசியலைப் புறக்கணிப்போம், மொழியைக் கற்போம்"

வேம்பு, ஒரு முக்கிய தொழில்நுட்ப தொழில்முனைவோர், மாநிலங்களுக்கு இடையேயான வணிகம் விரிவடைந்து வரும் ஒரு நாட்டில் இந்தி கற்பதன் நடைமுறை நன்மைகளை சுட்டிக்காட்டி தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், "கடந்த 5 வருடங்களில் இந்தி வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இப்போது 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார். மற்றவர்களையும் மொழியை ஏற்றுக்கொள்ள ஊக்குவித்த அவர், "அரசியலைப் றக்கணிப்போம், மொழியைக் கற்றுக்கொள்வோம்!" எனக் கூறினார்.

தி.மு.க ராஜ்யசபா எம்.பியான அப்துல்லா, சவுதி அரேபியாவில் வேம்புவின் வணிக விரிவாக்கத்தை சுட்டிக்காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. "அன்புள்ள திரு. வேம்பு சார், சவுதி அரேபியாவில் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாழ்த்துகள்! அரேபிய மொழியைக் கற்காமல் நீங்கள் இதை எப்படி அடைந்தீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. எனவே, தமிழர்கள் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "இன்று தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள எங்கள் பொறியாளர்கள் வடக்கில் ஜோஹோ தயாரிப்புகளை செயல்படுத்தி வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். எங்கள் வணிகத்தின் இந்த பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இதேபோல், எங்களிடம் மத்திய கிழக்கு சார்ந்த நிறுவனங்களுடன் பணிபுரியும் பொறியாளர்களும் உள்ளனர். மேலும் அந்த நிறுவனங்களில் எங்களின் சகாக்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவும் உள்ளனர். (மலையாளிகள் மற்றும் தமிழர்கள் பெரும்பாலும், இந்தி/உருது மொழி பேசுபவர்கள்). மலையாளம் மற்றும் தமிழ் தவிர, மத்திய கிழக்கில் இந்தி/உருது உண்மையில் மிகவும் உதவியாக உள்ளது. அரபு ஆதரவு தேவைப்படும் மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுடன் வேலை செய்ய அரபு மொழி பேசுபவர்களும் சென்னையில் உள்ளனர். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் சார். உங்கள் தொகுதிக்கு அருகில் உள்ள எங்கள் கிராமப்புற அலுவலகத்திற்குச் சென்று இதை நீங்களே பார்க்குமாறு உங்களை அழைக்கிறோம்" என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் பா.ஜ.க இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக தி.மு.க குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பான கருத்துகள் மாநிலம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில், பொள்ளாச்சி ஜங்ஷன் மற்றும் பாளையங்கோட்டையில் ரயில் நிலையங்களில் இருக்கும் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்தனர். இதனால், தி.மு.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘மொழிப் போர்’ என்றால் என்ன?

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தின் எதிர்ப்பு புதிதல்ல. தமிழ்நாடு, 1960 களில் இருந்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நிலைநிறுத்தி, மூன்றாம் மொழியாக இந்தியைத் திணிப்பதை எதிர்த்து வருகிறது. "மொழிப் போர்" என்பது 1965 ஆம் ஆண்டு தி.மு.க.வின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் குறிக்கிறது. 

Dmk Hindi Impositon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: