Advertisment

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trichy, central government offices, hindi letters, black paint, police, திருச்சி, மத்திய அரசு அலுவலகங்கள், இந்தி எழுத்துகள், கறுப்பு மை, போலீஸ்

trichy, central government offices, hindi letters, black paint, police, திருச்சி, மத்திய அரசு அலுவலகங்கள், இந்தி எழுத்துகள், கறுப்பு மை, போலீஸ்

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி உள்ளிட்ட பலபகுதிகளில் இயங்கிவரும் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிகளிலும் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்துள்ளனர். விமானநிலையம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் உள்ள பகுதியாகும். எனவே, இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எந்த ஒரு அமைப்பும் இதுவரை இந்தி எழுத்துக்கள் அழிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை. இந்த சூழலில், கறுப்பு மை பூசி இந்தி எழுத்துக்களை அழித்த விஷமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment