திருப்பரங்குன்றத்தில் கவன ஈர்ப்பு மக்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கோவையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து கோவையில் காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி மாநகர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது;
/indian-express-tamil/media/post_attachments/4bc18d28-faa.jpg)
ஒரு கட்டத்தில் அந்த பகுதியில் முஸ்லிம்கள் இணைந்து பிரச்சனை செய்ததற்காக இந்த நாத்திக அரசாங்கம் அங்கு தீபம் ஏற்ற விடவில்லை. மலை மீது தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என பக்தர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். ஆனால் இன்று வரை அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை.
அங்கு இருக்கும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்ற போராட்டம் செய்து கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து 30 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நடந்து கொண்டு தான் உள்ளது.
இங்கு பாதை யாத்திரை செல்லக் கூடியவர்கள், சபரிமலைக்கு செல்லக் கூடியவர்கள், மாலை அணிவித்து விரதம் இருந்து, அந்த மலை மீது வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். மலை மீது காசி விஸ்வநாதரின் ஆலயம் உள்ளது. காசிக்கு சமமான தீர்த்தம் அங்கு உள்ளது. இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை