scorecardresearch

காதலர் தின எதிர்ப்பு: ”பெண்களை பாதுகாக்க வேண்டும்” என கோஷமிட்ட இந்து முன்னணியினர் கைது

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணியினர், சென்னையில் தனியார் கல்லுரிகளுக்கு வெளியே நின்று கோஷங்கள் எழுப்பி நோட்டீஸ் வழங்கினர்.

பிப்ரவரி 14-ம் தேதி உலக நாடுகள் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்.14-யை பசுவை அரவணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததால், இந்த அறிக்கையை திரும்பபெறப்பட்டது.  

இந்நிலையில் காதலர் தினத்தை எதிர்த்து, சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு வெளியே கோஷங்கள் எழுப்பிய, பார்த் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  உண்மையான காதல் வாழ வேண்டும் என்றும் காதலர் தின கலாச்சாரம், பெண்களை பாதிக்கும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெண்களை பாதுகாப்போம் என்றும் காதல் பற்றிய விபரீதங்களை பெண்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் மாணவிகளுக்கு துண்டு அறிக்கை கொடுக்கப்பட்டது. பல மாணவிகள் இதை வாங்கவில்லை. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரத் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hindu fundamentalists protest against lovers day chennai

Best of Express