மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கோவையில் கல்லூரி தாளாளர் பாஸ்டர் டேவிட் வியாழக்கிழமை பொலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவையில் தடாகம் சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தின் தாளாளர் பாஸ்டர் டேவிட். இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், கல்வி நிறுவனத்தின் தாளாளர் மற்றும் பாஸ்டர் டேவிட் மீது துடியலூர் காவல் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஸ்டர் டேவிட், இந்த ஆண்டு விநாயகர் சந்தூர்த்தி நாளில், கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் பிரார்த்தனை யாத்திரை செய்ய வேண்டும் எனக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம், டேவிட் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பினரின் புகாரின் பேரில், கோவை துடியலூர் போலீசார், பாஸ்டர் துண்டு பிரசுங்களை விநியோகித்து மத பிரசாரம் செய்து வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியாதாக அவரை தடாகம் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில், கல்லூரி தாளாளர், பாஸ்டர் டேவிட் மத பிரசாரம் செய்து துண்டு பிரசாரம் விநியோகித்து வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கியதாக இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் காடேஸ்வரா, தேவைப்பட்டால் தடையை மீறி விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"