இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு: 26 ஆண்டுகளுக்குப் பிறகு மூவர் விடுதலை

3 men acquitted from Chintadripet Hindu Munnani State headquarters bomb blast case, happened in 1995 Tamil News: இந்து முன்னணி தலைமையகத்தில் 26 வருடங்களுக்கு முன்னர் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

Hindu Munnani State headquarters bomb blast case; 3 men acquitted after 26 years

Hindu Munnani State headquarters bomb blast case Tamil News: சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யமுதலி தெருவில் அமைந்துதிருந்த இந்து முன்னணி மாநில தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 1995ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மாலை 4 மணியளவில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்து முன்னணி தலைவர் ‘பைபிள்’ சண்முகம் மற்றும் வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்படும் முஸ்தபா ரஷித்க் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், அந்த வழியாகச் சென்ற எஸ்.பாலமுருகன், ஏ.தியாகராஜன், ரவிக்குமார் ஆகிய 3 பேர் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தனர்.

இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த முஸ்தபா, தான் எதிர்பார்த்த நேரத்தில் குண்டு வெடிக்காததால், அந்த அலுவலகத்திற்குள் மீண்டும் சென்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் அலுவலக ஊழியர்கள் சுற்றி வளைத்தபோது, அவர் அவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்களில் பலர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் முஸ்தபா வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் காஜா நிஜாமுதீன், ஜாகீர் உசேன், ராஜா உசேன், அபுபக்கர் சித்திக் என்ற ஏ.எம்.ஏ. சித்திக் மற்றும் முஸ்தபா ரஸாதிக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிறகு இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கும், அதன்பின்னர் சிபி-சிஐடி சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஸ்தபா ரஸாதிக் சம்பவ இடத்திலே இறந்ததால், அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. அபுபக்கர் சித்திக் மட்டும் இன்னும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

காஜா நிஜாமுதீன், ஜாகீர் உசேன், ராஜா உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீதான விசாரணை மட்டும் நடைபெற்று வந்தது. சுமார் 16 வருட கால தாமதத்திற்குப் பிறகு, கடந்த 2011ம் ஆண்டு எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாப்பட்டு, பிறகு வழக்கு பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

26 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு

இந்நிலையில், சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நேற்று செவ்வாய்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி பி வேல்முருகன், சமர்ப்பிப்புகளை ஆய்வு செய்த பின்னர், அரசுத் தரப்பு தங்கள் வாதங்களை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஜா நிஜாமுதீன், ஜாஹிர் உசேன் மற்றும் ராஜா உசேன் ஆகிய 3 பேரையும் விடுவிக்க கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ஒரு மூத்த வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்பற்றிய காலதாமத யுக்தியால் வழக்கின் நடவடிக்கைகள் தாமதமாகின. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் மெலிதான காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் ஒத்திவைக்க முயன்றனர் மற்றும் வழக்கறிஞர்களை கூட நியமிக்கவில்லை. அவர்களுக்கு சட்ட உதவித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வழங்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறிய பிறகுதான் அவர்கள் தங்கள் ஆலோசகர்களை நியமித்தனர். என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hindu munnani state headquarters bomb blast case 3 men acquitted after 26 years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com