Advertisment

அடுத்த ஆக்‌ஷனில் பொன். மாணிக்கவேல்: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை : சிலை முறைகேட்டு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கு குறித்து முழு விசாரணைக்காக இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அதே போல், . ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.7 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை இந்திய தொழில்நுட்பக் கழக வல்லுநர் குழு உறுதி செய்தது. இதனையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம் கோயில்களில் இணை ஆணையராக பணியாற்றியவர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamilnadu Pon Manikkavel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment