சென்னையில் மதரீதியாக சர்ச்சைக்குறிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிவனடியார் கோபால் என்கிற மவுண்ட் கோபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து தமிழ் பேரவை மற்றும் உலக இந்து புரட்சிப்படை என்னும் ட்விட்டர் பக்கங்களில் மதரீதியாகவும் அரசியலுக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார் கோபால். மண்ணடியை சேர்ந்த சயித் அலி என்பவர் அளித்த புகாரின் பெயரில் இவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் கடந்த 2020ம் ஆண்டு இதுபோன்ற குற்றங்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil