மதுரை திருப்புவனம் அருகேயுள்ள முதுவன்திடல் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் மொஹரம் பண்டிகையை இஸ்லாமியர்களைப் போல கொண்டாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் மொஹரமும் ஒன்று. மொஹரம் பண்டிகையை இஸ்லாமியர்களைப் போல மதுரை திருப்புவனம் அருகேயுள்ள முதுவன்திடல் கிராமத்தில் அங்கு வசிக்கும் இந்துக்கள் கொண்டாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதுவன் திடலில் முன்பு இஸ்லாமியர்களும் வசித்துவந்தனர். இஸ்லாமியர்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்ட போதும் ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகைக்கு பத்துநாட்கள் முன்பே இந்தக் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் அதைக் கொண்டாடத் தயாராகின்றனர். பாத்திமா நாச்சியார் என்பவருக்கு இந்த ஊரில் தர்கா உள்ளது.
மொஹரம் பண்டிகையன்று பூக்குழி வளர்த்து அதில் இறங்கி பாத்திமா நாச்சியாரை வணங்குகின்றனர். மேலும், பாத்திமா நாச்சியாருக்கு ஒரு சப்பரம் எடுத்து ஊர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. முதுவன்திடலில் இந்துக்கள் முகரம் பண்டிகையைக் கொண்டாடிவருவது மதநல்லிணக்கத்திற்குச் சான்றாகச் சொல்லலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”