கார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா? இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு!

ஒரு திரைப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற வேண்டும் என சென்சார் போர்ட் தான் தீர்மானிக்க வேண்டும் – படத்தின் தயாரிப்பாளர்

Hindutva group, BJP disrupt Karti's Sultan film shooting
Hindutva group, BJP disrupt Karti's Sultan film shooting

Arun Janardhanan

Hindutva group, BJP disrupt Karti’s Sultan film shootingநடிகர் கார்த்தி நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படத்தின் பெயர் சுல்தான். ஆக்சன் காமெடி படமாக உருவாகி வரும் அந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தொல்லியல் ஆராய்ச்சி களம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமையன்று (24/09/2019) அன்று அந்த படத்தின் காட்சிகளை படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

அந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்த அந்த நபர்கள், காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் கோஷங்களை எழுப்பினர். எதுவும் புரியாத திரைப்பட குழுவினர்கள் என்ன விவகாரம் என்று கேட்க, ”சுல்தான் படம், மைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதாகவும்” அறிவித்தனர்.

நிலைமையை உணர்ந்த படக்குழுவினர், போராட்டக்காரர்களிடம், இந்த படம் திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படம் இல்லை என்பதை சொல்லி புரிய வைக்க முயன்றனர். ஆனாலும் பலன் ஏதும் இல்லை என்று உணார்ந்த அவர்கள், அங்கிருந்து படப்பிடிப்பு கருவிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அந்த தளத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “திப்பு சுல்தானின் வாழ்க்கையை சித்தகரிக்கும் படம் இது இல்லை என்றும், சில அமைப்புகள் சினிமா துறையை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்” என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற வேண்டும் மற்றும் இடம்பெறக் கூடாது என்பதை சென்சார் போர்ட் மட்டுமே உறுதி செய்யும். படங்களை எடுப்பதற்கு இவ்வாறு தடையாக இருக்கும் குழுக்களுக்கு தன்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hindutva group bjp disrupt kartis sultan film shooting over rumours of tipu sultan biopic

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com