எச்.எம்.பி.வி தொற்று பரவல் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க கோரி அ.தி.மு.க, காங்கிரஸ் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.
சீனாவில் இருந்து இந்தியா, மலேஷியா உட்பட பல நாடுகளில் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலத்தை சேர்ந்த 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை, முக கவசம் அணிந்து, கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், எச்.எம்.பி.வி தொற்று பரவல் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க கோரி அ.தி.மு.க, காங்கிரஸ் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.
எச்.எம்.பி.வி தொற்று பரவல் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க கோரி அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ பிரின்ஸ் ஆகியோரும் சபாநாயகர் அப்பாவுவிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.