கிறிஸ்துமஸ், உள்ளாட்சி தேர்தல், ஆங்கில வருட பிறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.
Advertisment
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், நாளை முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டிசம்பர் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த 8 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.