Mayiladudurai | மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.4,2024) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். மயிலாடுதுறையில் உள்ள செம்மங்குளம் என்ற பகுதியில் இந்தச் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது.
இதையடுத்து செம்மங்குளம் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் 93608 89724 என்ற எண்ணுக்கு தொடர்புக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து, தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செவன்த் டே அட்வென்டிஸ்ட், அழகு ஜோதி மழலையர் பள்ளி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விஜய் நர்சரி பிரைமரி பள்ளி, அறுபத்து மூவர் நர்சரி பிரைமரி, ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“