திருவெறும்பூர் பெயர் வரக் காரணமான எறும்பீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று மாலை யாகசாலை பூஜை தொடங்க உள்ளது. யாகசாலை பூஜைக்கு இன்று காவிரியில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. திருவெறும்பூர் அருகே மலை மேல் வீற்றிருக்கும் அருள்மிகு நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
பழமையும் பெருமையும் கொண்ட இக்கோயில் கும்பாபிஷேக விழாவிறகு யாகசாலை பூஜை நடத்துவதற்கு பிரம்மாண்டமான கூடாரம் அமைத்து அதில் கடந்த ஒரு வாரமாக பூஜை பீடங்கள் அமைக்கப்பட்டது. இன்று மாலை யாகசாலை பூஜை தொடங்க உள்ளது. இதனை அடுத்து யாகசாலை பூஜைக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் வேங்கூர் பூசத்துறை பகுதியில் இருந்து இன்று எடுத்துவரப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம் பழனியப்பன் தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் ரா.வித்யா முன்னிலை வகித்தார். இதில் அறங்காவலர்கள் க. பன்னீர்செல்வம், மா.அமுதா மாரியப்பன், இரா.நல்லேந்திரன் வ. கருணாகரன் மற்றும் பக்தர்கள் கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
யாக சாலை பூஜை இன்று மாலை தொடங்கி காலை மாலை இரு வேளைகளிலும் நடைபெறும். ஏப்ரல் ஏழாம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணியிலிருந்து பத்தரை மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
யாகசால பூஜைகளை சர்வ சாதம் விகாஸ் ரத்னா டாக்டர் சிவஸ்ரீ கே பிச்சை, சிவா கம சிரோமணி சிவஸ்ரீ எஸ்.கே ராஜா பட்டர், உப சர்வ சாதம் சிவகாம ரத்னா சிவஸ்ரீ எஸ் ஆதி சொக்கநாதர் சிவாச்சாரியார், சிவா கமரத்னா சிவஸ்ரீ எம் சதீஷ் சிவாச்சாரியார், மற்றும் எறும்பீஸ்வரர் ஆலய அர்ச்சகர்கள் சிவஸ்ரீ ஆர் கணேசன் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஆர் மணிகண்டன் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஜி சதீஷ் ஆகியோர் செய்ய உள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்