ஏ.சி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கும், சாதாரண குடிமகனுக்கும் அத்தியாவசிய தேவையான ஏ.சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனையகங்களையும், ரிப்பேர் செய்யும் கடைகளையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி பாதுகாக்க ஃபிரிட்ஜ் அத்தியாவசியமாகிறது எனவும், பொதுமக்களின் அன்றாட தேவையான இந்த வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்தால், அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”