மின் வாரிய உத்தரவை எதிர்த்து வழக்கு; அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

home eb bill reading, case against eb order, tangedco, மின்சார கட்டணம், மின்சார வாரியம், சென்னை உயர் நீதிமன்றம், chennai high court notice to state govt, latest tamil news, latest tamil nadu news, chenai high court, eb bill
ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisment
Advertisements
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கினால், நான்கு மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை சேர்த்து பில் போடுவதால் 14 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய பிறபித்த உத்தரவை ரத்து செய்து இரண்டு மாதங்களுக்கு தனித்தனியாக பில்–கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது
அரசு தரப்பில், மின் கட்டணம் கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்தில் மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"