scorecardresearch

சென்னையில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்: காரணம் என்ன?

அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் தெருக்கள் அல்லது வீடுகளுக்கு, தனிமைப்படுத்தப்படும் எச்சரிக்கையுடன் உள்ள ஸ்டிக்கர்களை ஓட்ட முடிவு செய்துள்ளனர்.

home isolation stickers
Source: Twitter/ @chennaicorp

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், அமைச்சர் மா.சுப்ரமணியன் சமீபத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2020 ஊரடங்கு போது கொண்டுவரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

அதில் ஒன்றான, அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் தெருக்கள் அல்லது வீடுகளுக்கு, தனிமைப்படுத்தப்படும் எச்சரிக்கையுடன் உள்ள ஸ்டிக்கர்களை ஓட்ட முடிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்ப, தனிப்படுத்தப்படும் ஸ்டிக்கர்களை பயன்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை முழுவதும் இந்த ஸ்டிக்கர்களை ஓட்டுவதற்கு திட்டமிடவில்லை என்றாலும், அதிக பாதிப்பை கொண்ட பகுதிகளில் இந்த முறையை பயன்படுத்த இருப்பதாக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Home isolation stickers in covid affected areas chennai