Advertisment

கோவையில் புதிய இடத்தில் நவீன சிறை; உள்துறை செயலாளர் ஆய்வு

கோவையில் புதிதாக நவீன சிறைச்சாலை அமைக்க திட்டம்; மத்திய சிறையில் உள்துறை செயலாளர், ஆட்சியர் ஆய்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amudha Kovai

கோவையில் புதிதாக மார்டன் சிறைச்சாலை அமைக்க திட்டம்; மத்திய சிறையில் உள்துறை செயலாளர், ஆட்சியர் ஆய்வு

உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் புதிதாக சிறைச்சாலை அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் புதிதாக சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: கோவை, விழுப்புரம்… தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வருகை புரிந்திருந்தார். கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

publive-image

இந்த ஆய்வில் தற்பொழுது கோவை மத்திய சிறையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு வசதிகள், இங்கு சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா புத்தகங்களை வழங்கினார்.

கோவை சிறைச்சாலை என்பது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ள சிறைச்சாலை ஆகும். எனவே இங்குள்ள கட்டமைப்புகளை போல் அல்லது இன்னும் தரம் உயர்த்தி கட்டுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளதால், வேறு இடத்திற்கான பரிந்துரை அனுப்பி இருந்தோம். அதன்படி உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் சிறை அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டார்.

publive-image

புதிதாக பகுதியில் அமைய உள்ள சிறைச்சாலையில் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து வித வசதிகளும் உள்ள சிறையை கட்ட வேண்டும். கோவையில் சிறை மட்டுமல்லாது, இங்கு உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மேட்டுப்பாளையம் பகுதியில் எதிர்காலத்திற்கு தகுந்தாற்போல் மேம்படுத்தி கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தெலுங்கானாவில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறையையும் அவர் ஆய்வு செய்து, அனைத்து வசதிகளையும் கொண்ட மார்டன் சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளிச்சியில் ஏற்கனவே சுமார் 80 ஏக்கர் அளவில் அரசு நிலம் உள்ளது. தேவைப்பட்டால் நிலம் கையகப்படுத்தப்படும். சிறையில் மனித உரிமை சம்பந்தமான ஆய்வு எதுவும் இன்று செய்யப்படவில்லை. இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Prison
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment