2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த அனைத்து பள்ளிக்களுக்கும் சுற்றிறிக்கை அனுப்பி இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வீட்டுப்பாடம் கூடாது:
சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. வகுத்த பாட புத்தகங்கள் தவிர, தனியார் பாட புத்தகங்களை பயன்படுத்துவதாகக் கூறி, வழக்கறிஞர் புருேஷாத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், முதல் வகுப்பு குழந்தைகளுக்கு கூட வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் எந்த விதிகளும் இல்லாமல் கூடுதல் பாடப்புத்தகங்களை வங்க பெற்றோர்களை நிர்பந்தம் செய்வதாகவும் எனவே என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை விடு கூடுதலாக புத்தகங்களை படிக்க தடை விதிக்க வேண்டும் கூடுதல் பாடங்களை எடுக்க தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், அனைத்து பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி என். கிருபாகரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க கூடாது என முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.