கொரோனா சிகிச்சைக்கு ஆர்செனிகம் ஆல்பம் 30 எனும் ஹோமியோபதி மருந்து – தமிழக அரசு

Covid-19 in Tamil Nadu: கொரோனா தொற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்கு […]

Corona virus in tamil nadu, today corona tn reports, covid 19 in tamil nadu, corona tn reports today, Homoeopathic drug Arsenicum album 30, கொரோனா வைரஸ், தமிழகத்தில் கொரோனா, madras high court, tamil nadu government
Corona virus in tamil nadu, today corona tn reports, covid 19 in tamil nadu, corona tn reports today, Homoeopathic drug Arsenicum album 30, கொரோனா வைரஸ், தமிழகத்தில் கொரோனா, madras high court, tamil nadu government

Covid-19 in Tamil Nadu: கொரோனா தொற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்கு பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினம் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் – தமிழக அரசு

இந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23 ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற இந்த ஹோமியோபதி மருந்தை அனைத்து மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், தொற்று பாதித்தவர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, பாடியைச் சேர்ந்த ஜேசய்யா அன்டோ பூவேந்தன் என்ற ஹோமியோபதி மருத்துவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும் அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்செனிகம் ஆல்பம் – 30 மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஏற்று, அதை பயன்படுத்த தமிழக அரசும் அரசாணை பிறப்பித்து, அமல்படுத்தி வருவதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த 1000 பஸ்கள்: ஸ்கூட்டர், ஆட்டோ பதிவெண் இருப்பதாக உ.பி. அமைச்சர் குற்றச்சாட்டு

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Homoeopathic drug arsenicum album 30 using for corona virus treatment tn government

Next Story
மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினம் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் – தமிழக அரசுmadras high court, chennai high court, tamil nadu government, ppe kits, சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட், தமிழக அரசு, பிபிஇ முழுகவச உடைகள், latest tamil news, tamil news, news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com