”இந்தியாவில் நான் வாழ முடியாது” கேலி, கிண்டலால் உயிரை மாய்த்துக் கொண்ட ஓரினச்சேர்க்கை இளைஞர்!

நீலாங்கரை கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

homosexual youth committed suicide : சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஓரினச்சேர்க்கை மீது ஈர்ப்புக் கொண்ட இளைஞர் நண்பர்களின் கேலி, கிண்டலால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் படேல். 20 வயதான இவர், சென்னையில் முடிதிருத்தும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது தொழில் திறமையால் அனைவரையும் கவர்ந்த இவரை நண்பர்களாக தொடர்ந்து கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையில் ஈர்ப்புக்கொண்ட அவினாஷின் உடல் மொழி, நடை இவை எல்லாவற்றிலும் சற்று வித்யாசம் தெரிந்துள்ளது. இதனால் அவினாஷை அவரது நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர் ஆகியோர் அவரைக் கேலி செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன அவினாஷ் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதி வைத்துட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது பதிவில் ‘ஓரினச்சேர்க்கை விருப்பம் இயற்கையாகெவே எனக்குள் உள்ளது. என்னைக் கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இந்தியா போன்ற நாட்டில் என்னால் ஓரினச்சேர்க்கையாளனாக வாழ்வது இயலாதக் காரியம்’ என உருக்கமாக பதிவு செய்தார்.

இவரின் பதிவை கண்டு அவரின் மற்ற நண்பர்கள் அவினாஷ் மொபைலுக்கு தொடர்புக் கொண்டனர். ஆனால், யாரின் ஃபோன் காலையும் எடுக்க விரும்பாத அவினாஷ் அன்று இரவு நீலாங்கரை கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது பேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். நண்பர்களின் கேவலாக கேலி மற்றும் கிண்டலால் அவினாஷின் உயிர் பறிப்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இறப்பதற்கு முன்பு அவினாஷ் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close