scorecardresearch

கள்ளச்சாராய மரணங்கள்: மே 22 அ.தி.மு.க பேரணி

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச் சாராய மரணங்களுக்கு நீதி கோரி அ.தி.மு.க மே 22ஆம் தேதி கண்டன பேரணி நடத்துகிறது.

Hootch Tragedy May 22 AIADMK rally
முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் மே 22 அ.தி.முக பேரணி நடத்த உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கள்ளச் சாராய மரணங்களுக்கு நீதி கோரி மே 22ஆம் தேதி கண்டன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பேரணிக்கு முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். தொடர்ந்து, அதிமுகவினர் பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என். ரவியிடம் மனு அளிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்விழு நடந்த கள்ளச் சாராய மரணங்கள் தமிழ்நாட்டை உலுக்கின. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, 40க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், அதிமுகவினர் பி.டி.ஆர். ஆடியோ குறித்தும் புகார் அளிப்பார்கள் எனத் தெரியவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hootch tragedy may 22 aiadmk rally

Best of Express