Advertisment

மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி: அண்ணாமலைக்கு உடல்நிலை பாதிப்பு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” நடைபயணம் மூலமாக மக்களை சந்தித்து வருகிறார். அவருக்கு தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
annamalai yatra

என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலை.

TN BJP President Annamalai Health Report : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.

Advertisment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” நடைபயணம் மூலமாக மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நடைபயணம் அடுத்தக் கட்டமாக அக்.6ஆம் தேதி தொடங்க இருந்தது. இந்த நிலையில் நடைபயணம் அக.16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், “அண்ணாமலைக்கு தீவிரமான தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் இருவார காலம் மருத்துவ ஓய்வில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலையின் உடல் நிலை காரணமாக நடைபயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை க்ளென் ஈகிள்ஸ் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.
அவருக்கு நுரையீரலிலும் சளி பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment