பெங்களூரு கார் விபத்து; திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு

Hosur DMK MLA’s son killed by road accident in Bengaluru: பெங்களூரு சாலை விபத்தில் ஒசூர் திமுக எம்.எல்.ஏவின் மகன் உட்பட 7 பலி

பெங்களூருவில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை நடந்த சாலை விபத்தில் திமுக எம்.எல்.ஏ-வின்  மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சாலையின் பாதசாரிகள் நடைமேடை மற்றும் காம்பவுண்ட் மீது ஒரு எஸ்யூவி கார் மோதியதில் அதில் பயணம் செய்த தம்பதியர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 21-28 வயதுக்குட்பட்டவர்கள். அதிகாலை 1.30 மணியளவில் கோரமங்களா அருகே உள்ள மங்கள கல்யாண மணடபம் அருகே இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.

நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் இறந்துவிட்டதாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ரவிகந்தே கவுடா கூறியுள்ளார். மேலும், அவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும், முதன்மையாக, கார் வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓடியது போல் தெரிகிறது என அவர் கூறியுள்ளார்.

ஆடுகோடி போக்குவரத்து போலீசார் வேகமாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஓசூரைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்துவிட்டதாக காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hosur dmk mlas son killed by road accident in bengaluru

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com