பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்; அதிகரித்த கடன்; கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தற்கொலை

பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்; அதிகரித்த கடன் தொல்லை; கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; ஒசூரில் அதிர்ச்சி சம்பவம்

பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்; அதிகரித்த கடன் தொல்லை; கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; ஒசூரில் அதிர்ச்சி சம்பவம்

author-image
WebDesk
New Update
Neet Suicides

பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்; அதிகரித்த கடன் தொல்லை; கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; ஒசூரில் அதிர்ச்சி சம்பவம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாக கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமாருக்கு (வயது 27) சந்தியா (வயது 23) என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எனவே விஜயகுமார் – சந்தியா தம்பதி ஓசூர் பேகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் அவரது தாயும் உதவிக்காக அவர்களுடன் தங்கி இருந்தார்.

இதனிடையே, விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். மேலும், அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்கு சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். இதனால், கடன் அதிகரிக்கவே அதனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜயகுமாரும் அவரது மனைவி சந்தியாவும் தங்களது அறைக்கு தூங்க சென்றனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. தேர்தல் நாள் அன்று அலுவலகம் விடுமுறை என்பதால், இருவரும் நன்றாக தூங்குவதாக குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் மதியம் அவரை ஆனதால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாயார் கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு விஜயகுமாரும் சந்தியாவும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கினர். 

Advertisment
Advertisements

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் விஜயகுமார் அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கடன் தொல்லைக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்துவிட்டேன் என்று எழுதி வைத்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் கர்ப்பிணி மனைவியுடன், வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ, அதை மாற்ற கீழ்க்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மாநில உதவி மையம்: 104

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suicide

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: