2016-ம் ஆண்டு முதல் 34% சாலை விபத்துக்களை தவிர்த்ததோடு, 54% சாலை விபத்தில் இறப்பவர்களை தடுத்து, இந்தியாவிலே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலமாக தமிழகம் தெரிவு செய்யப்பட்டது. இதற்காக விருது வழங்கி பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சாலை விதிகள் பற்றியும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமான மாநிலமாக உள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு, 2018-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையில் இருந்த 2000 மதுபான கடைகளை அகற்றியுள்ளது. சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளிப் பாடத்திட்டத்துடன் இணைத்து, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது பற்றியும், சாலை விதிகளை மதிப்பது பற்றியும் காவலர்கள் மூலமாக விழிப்புணர்வுவை மேற்கொண்டு வருகின்றது.
66,000 கி /மீ தூரம் கொண்ட, சாலைகளை உடைய மாநிலமாக தமிழகம் உள்ளது. 3 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்களையும், 2 கோடி வாகனம் ஓட்டுவதற்கான உரிமங்களையும் வழங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு வரை சாலை விபத்து அதிகம் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்து வந்தது. ஆனால் தற்போது 13.7% சாலை விபத்தும், 11% சாலை விபத்தில் இறந்தவர்களும் கொண்ட தரவுகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
"உலகிலே இந்தியாவில் தான் 11% சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் 1.5 லட்ச மக்கள் இறந்து போகிறார்கள். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு முதல் 70,000 சாலை விபத்துகள் நடந்துள்ளன, அதில் சுமார் 17,000 பேர் இறந்துள்ளனர். அதோடு சாலை விபத்து அதிகம் ஏற்படும் மோசமான மாநிலமாக தமிழகம் இருந்தது. எனவே உச்ச நீதி மன்றம் 2020-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50% - ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதை கருத்தில் கொண்டு, உச்ச நீதி மன்றம் கூறியதை விட குறைத்து 54% உள்ள மாநிலமாக மாற்றினோம். மற்றும் சாலை விபத்து பூஜ்ஜிய சதவீதம் உள்ள மாநிலமாக மாற்றுவோம்" என்கிறார் தமிழகத்தின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் எம்.மனகுமார்.
'50 கி/மீ சுற்றளவில் விபத்து நடப்பதை கண்டு பிடிப்பதற்காக சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது. விபத்தில் சிக்கியவர்களின் அவசர காலத்தில் உதவுவதற்காக ஆம்புலன்ஸ்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கிய17,000 பேரில் 76% பேருக்கு அவசர ஊர்திகளை பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் ஆண்டுதோறும் சுமார் 82,000 சாலை விபத்துகளை சந்தித்து வந்ததுள்ளது. ஆனால் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு அது 3,205 -ஆக குறைந்துள்ளது. சாலை விபத்துகளை தவிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட ஆட்சியர் மூலமாக காவல் துறை,நெடுஞ்சாலை துறை, மற்றும் மருத்துவ துறைகளுக்கு பிரித்து அனுபப்படுகின்றது' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"சாலை விபத்துகளை தவிர்ப்பதில் தமிழகம் பின்பற்றும் பாணியை சில மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால் சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் மாநிலமாக தமிழகம் இருந்தாலும் இன்னும் சில இடங்களில் விபத்துகள் நடைபெறுவதை காண முடிகின்றது" என்று
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துக்களைக் குறைப்பதைப் பொறுத்தவரை, தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.