மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி வாய்ப்பு: பூஜ்ய கணக்கை மாற்றுமா பா.ஜ.க?

தமிழ்நாட்டில், 18வது மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு 2019 தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் (20 தொகுதிகள்) தி.மு.க வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில், 18வது மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு 2019 தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் (20 தொகுதிகள்) தி.மு.க வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
How many seats will BJP get in Tamil Nadu in 2024 Lok Sabha elections

தமிழ்நாட்டில் 2019 மக்களவை தொகுதியில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Lok Sabha Election | Dmk | Aiadmk | Tn Bjp | 18வது மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கட்சிகள் கூட்டணி நிலவரம்

Advertisment

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ், இந்தியன் யூளியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட பலவேறு கட்சிகள் உள்ளன.

மறுபுறம், மூன்றாம் அணி அமைத்துள்ள பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
நாம் தமிழர் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார். இக்கட்சி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து, மொத்தமுள்ள 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்களை அறிவித்துள்ளது.

போட்டி

2019 மக்களவை தேர்தலில் தி.மு.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், மார்க்சிஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதியில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன.

Advertisment
Advertisements

இதில் தேனி தவிர மற்ற இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் (புதுச்சேரி உள்பட) 39-ஐ தி.மு.க கைப்பற்றியது.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் தென் சென்னை, கோவை, விருதுநகர், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் தி.மு.க, பா.ஜ.க இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தென் சென்னை மக்களவை தொகுதி

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த தொகுதியில் 2,105,824 மக்கள் வசிக்கின்றனர். இதில், 3.35% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், 96.65% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.

பட்டியல் சாதி (SC) மக்கள் தொகை 12.54% ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) மக்கள் தொகை 0.22% ஆகவும் உள்ளது. சென்னை தெற்கு தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

2014ஆம் ஆண்டு தேர்தல்- அ.தி.மு.க. வெற்றி

கட்சிவேட்பாளர் வாக்கு சதவீதம் (%)
அ.தி.மு.கஜெயவர்தன்434,540    41.34%
தி.மு.க.டி.கே.எஸ் இளங்கோவன்2,98,96528.44%
பா.ஜ.கஇல. கணேசன்2,58,26224.57%

2019 மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் 302,649 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மக்கள் நீதி மய்யம் (MNM) வேட்பாளர் ரங்கராஜன் 135,465 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு தேர்தல்- தி.மு.க. வெற்றி

கட்சிவேட்பாளர் வாக்கு சதவீதம் (%)
தி.மு.க.தமிழச்சி தங்கபாண்டியன்564,87250.28%
அ.தி.மு.கஜெயவர்தன்3,02,64926.94%
ம.நீ.மரங்கராஜன்1,35,46512.06%    

இம்முறை இங்கு தமிழச்சி தங்க பாண்டியன் (தி.மு.க), ஜெயவர்த்தன் (அ.தி.மு.க), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) இடையே போட்டி நிலவுகிறது. இது நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி

கோயம்புத்தூர் ஒரு தொழில்துறை நகரம், இது பெரும்பாலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு முக்கிய ஜவுளி உற்பத்தி மையமாகும்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமாகவும் செயல்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில், கோயம்புத்தூர் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 2,185,424 ஆகும், இதில் 17.97% கிராமப்புறங்களிலும் 82.03% நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். கூடுதலாக, பட்டியல் சாதி (SC) மக்கள் தொகை 13.38% ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) மக்கள் தொகை 0.28% ஆகவும் உள்ளது.

2009 மக்களவை தேர்தல்8.90%    

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பி.ஆர். நடராஜன்293,16535.64%
காங்கிரஸ் ஆர். பிரபு 2,54,501        30.94%    
கொங்கு நாடு மக்கள் கட்சி ஈ.ஆர். ஈஸ்வரன்1,28,070

15.57%    
தே.மு.தி.க ஆர். பாண்டியன் 73,188    8.90%    
பாஜக செல்வ குமார் 37,9094.61%    

சட்டமன்ற தொகுதிகள்

கோவை தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் CPI(M) வேட்பாளர் PR நடராஜன் 571,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர் மகேந்திரன் 145,104 வாக்குகளைப் பெற்றார்.

2014 மக்களவை தேர்தல்

அ.தி.மு.கநாகராஜன்431,71737.24%
பா.ஜ.கசி.பி. ராதாகிருஷ்ணன்3,89,701    33.62%
தி.மு.ககணேஷ்குமார்2,17,083    18.73%    
காங்கிரஸ்ஆர். பிரபு56,9624.91%    

2014 தேர்தலில் அதிமுகவின் நாகராஜன் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். நாகராஜன் மொத்தம் 431,717 வாக்குகளும், சிபி ராதாகிருஷ்ணன் 389,701 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கணேஷ்குமார் 2,17,083 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு 56,962 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

2019 மக்களவை தேர்தல்

மார்க்சிஸ்ட்பி.ஆர். நடராஜன்571,15045.85%
பா.ஜனதாசி.பி. ராதாகிருஷ்ணன்3,92,00731.47%
ம.நீ.மமகேந்திரன்1,45,10411.65%
நாம் தமிழர்கல்யாண சுந்தரம்60,5194.86%

மும்முனை போட்டி

கோயம்புத்தூர் மக்களவை தேர்தலில் இம்முறை 41 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அண்ணாமலை (பாஜக), கணபதி பி ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி ராமச்சந்திரன் (அ.தி.மு.க), கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) உள்ளிட்ட வேட்பாளர்களும் அடங்கும்.

விருதுநகர் மக்களவை தொகுதி

விருதுநகர் மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பாரத ரத்னா கே.காமராஜரின் சொந்த தொகுதி இதுவாகும்.

2009 மக்களவை தேர்தல்

காங்கிரஸ்மாணிக்கம் தாகூர்307,18740.02%
ம.தி.மு.கவைகோ291,42337.96 %
தே.மு.தி.கபாண்டியராஜன்125,22916.31%
பா.ஜனதாகார்த்திக்17,3362.26%

விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் 4 தொகுதிகள் அதிமுக எம்எல்ஏக்களும், இரண்டு திமுக எம்எல்ஏக்களும் வசம் உள்ளனர்.

2014 மக்களவை தேர்தல்

அ.தி.மு.க.ராதாகிருஷ்ணன்406,69440.20%
ம.தி.மு.க (பா.ஜனதா கூட்டணி)வைகோ261,14325.81%   
தி.மு.க.ரத்தினவேலு241,50523.87%
காங்கிரஸ்மாணிக்கம் தாகூர்38,482    3.80%

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருதுநகர் மக்கள் தொகை 1,942,288 ஆக உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்,

2014-19 நிலவரம்

திமுகவின் ஆர்.அழகர்சாமி 316,329 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் அதிமுகவைச் சேர்ந்த டி.ராதாகிருஷ்ணன் 1,350,495 வாக்குகளில் 406,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ம.தி.மு.க.வின் வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2019 மக்களவை தேர்தல்

காங்கிரஸ்மாணிக்கம் தாகூர்470,88343.77
தே.மு.தி.க. (அ.தி.மு.க பா.ஜனதா கூட்டணி)அழகர்சாமி316,329    29.40
அ.ம.மு.க.பரமசிவ ஐயப்பன்107,61510.00
ம.நீ.மமுனியசாமி57,1295.31

தற்போது இந்தத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் தே.மு.தி.க நிறுவனர் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஷ், பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க சார்பில் ஜான்சி ராணி களத்தில் உள்ளனர்.

2009 மக்களவை தேர்தல்

காங்கிரஸ்ராமசுப்பு274,93239.29%    
அ.தி.மு.க.அண்ணாமலை2,53,62936.24%
தே.மு.தி.கமைக்கேல் ராயப்பன்94,56213.51%
பா.ஜனதாகரு. நாகராஜன்39,9975.72%

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ், அ.தி.மு.க கோட்டை

இதில், 3 தொகுதிகள் திமுக வசம், 2 தொகுதிகள் அதிமுக வசம், ஒரு தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதி மற்றும் மாவட்டமான திருநெல்வேலி, பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாகும்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் 1 செப்டம்பர் 1790 இல் நிறுவப்பட்டது, இம்மாவட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. 2011 இன் படி, பிரிக்கப்படாத மாவட்டத்தில் 3,077,233 மக்கள் தொகை இருந்தது.

2014 மக்களவை தேர்தல்

அ.தி.மு.க.பிரபாகரன்398,13941.93%
தி.மு.கதேவதாச சுந்தரம்2,72,04028.65%    
தே.மு.தி.க (பா.ஜனதா கூட்டணி)சிவனனைந்த பெருமாள்1,27,37013.42%
காங்கிரஸ்ராமசுப்பு62,863    6.62%

லோக்சபா தேர்தல் வரலாற்றில், திருநெல்வேலியில், ஆரம்ப ஆண்டுகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது, 1962 வரை தன் பிடியை தக்க வைத்துக் கொண்டது.

1967ல், சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது, அதைத் தொடர்ந்து 1971ல் சிபிஐ வென்றது. இருப்பினும், 1977ல் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றியது. 1984, 1989, மற்றும் 1991. 1980ல் திமுக முன்னிலையில் இருந்தது, 1996ல் மீண்டும் வெற்றி பெற்றது.

2014-19 நிலவரம்

1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் அதிமுக அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றியது, அதைத் தொடர்ந்து 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் கேஆர்பி பிரபாகரன் வெற்றி பெற்றார்.

2019 மக்களவை தேர்தல்

தி.மு.கஞான திரவியம்522,99350.65%
அ.தி.மு.க (பா.ஜனதா கூட்டணி)மனோஜ் பாண்டியன்3,37,27332.66%    
சுயேச்சைமைக்கேல் ராயப்பன்62,2356.03%
நாம் தமிழர் பி. சத்யா49,935    4.84%    

2019 மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் எஸ்.ஞானதிரவியம் 5,22,993 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் 3,37,273 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி

தேசிய கட்சிகளாக காங்கிரஸ், பா.ஜனதா கோலோச்சும் இந்தத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பொன். ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தும் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமரி, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம், நாட்டின் தென்கோடியில் உள்ள மாவட்டம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

2009 மக்களவை தேர்தல்

தி.மு.கஹெலன் டேவிட்சன்320,16141.81%
பா.ஜ.க.பொன். ராதாகிருஷ்ணன்254,47433.24%
மார்க்சிஸ்ட்பெல்லார்மின்85,58311.18%
தே.மு.தி.க.ஆஸ்டின்68,4728.94%

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,870,374 மக்கள்தொகையுடன், தமிழ்நாட்டின் மாவட்டங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும், தனிநபர் வருவாயின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டமாக விளங்குகிறது. மாநிலத்தின் மிக உயர்ந்த மனித வளர்ச்சிக் குறியீடு (HDI), எழுத்தறிவு விகிதம் மற்றும் கல்வி நிலைகளை பெருமைப்படுத்துகிறது.

2014-19 நிலவரம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இதில் கன்னியாகுமரி, நாகர்கோவில், கொளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸின் எச்.வசந்தகுமார் 627,235 வாக்குகள் பெற்று 367,302 வாக்குகள் பெற்ற பாஜகவின் பி ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.

2014 மக்களவை தேர்தல்

பா.ஜ.கபொன். ராதா கிருஷ்ணன்372,90637.62%
காங்கிரஸ்ஹெச். வசந்த குமார்244,24424.64%
அ.தி.மு.க.ஜான் தங்கம்176,23917.78%
தி.மு.க.ராஜ ரத்தினம்117,93311.90%

2014 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் பி ராதாகிருஷ்ணன் 372,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், காங்கிரஸின் எச் வசந்தகுமார் 244,244 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

கருத்துக் கணிப்பு

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்றும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு 2 அல்லது 3 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

2019 மக்களவை தேர்தல்

காங்கிரஸ்ஹெச். வசந்த குமார்627,23559.77%
பா.ஜனதாபொன். ராதாகிருஷ்ணன்367,30235.00%
நாம் தமிழர்ஜெய்ன்டின்17,0691.63%
அ.ம.மு.க. லட்சுமணன்12,3451.18 %

இதற்கிடையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க இரட்டை இலக்க வாக்கு வங்கியை தொடும் என அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். மேலும், பா.ம.கவும் தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட 1 அல்லது 2 தொகுதியில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பணிபுரிந்தவர் ஆவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tn Bjp Dmk Aiadmk Lok Sabha Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: