திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டம் குறித்து தமிழக பட்ஜெட் தாக்கலில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், தகுதியுள்ளவர்களை அடையாளம் காணப்படுவார்கள் என்று அறிவித்தார். இதனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு தகுதியான' குடும்பத் தலைவிகளை எப்படி அடையாளம் காணப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து தமிழக பட்ஜெட்டில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்துக்காக ரேஷன் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் தேவையில்லை என்று கூறினார். மேலும், உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக தகுதியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்த குடும்பத் தலைவிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில், அறிக்கப்பட் பட்ஜெட்டில் குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை ஏழைக்களுக்கான திட்டம், வல்லுநர்களுடன் ஆலோசித்து தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாகவம், தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும், தமிழக அரசு, ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்குள் உள்ளவர்களுக்கு உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பட்டியலிலும் குளறுபடிகள் உள்ளன. அதனால், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பட்டியலை மறு ஆய்வு செய்தபின்னரே உரிமைத் தொகை வழங்க வேண்டும். இருப்பினும், அனைத்து குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற குடும்பத் தலைவிகளின் மத்தியில் உள்ளது. உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு நிதிநிலையை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும் என்று உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"