Advertisment

மகளிர் உரிமைத் தொகை: திருச்சி மாவட்டத்தில் பெறுவது எப்படி? வழிகாட்டு முறை வெளியீடு

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் சார்பில் 11 வட்டங்களில் இன்று முதல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
Jul 14, 2023 15:51 IST
New Update
How apply magalir urimai thogai in Trichy Dist in Tamil

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த 21 வயது நிரம்பிய பெண் ஒருவா் விண்ணப்பிக்கலாம். அதாவது 15-09-2002-க்கு முன் பிறந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவது எப்படி, என்ன தகுதிகள், யாரை அணுகுவது உள்ளிட்ட அனைத்துக்கும் மாவட்ட நிர்வாகம் விரிவான பதில் அளித்துள்ளது. மேலும் ஆட்சியரகம் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) இன்று முதல் கட்டுப்பாட்டு அறை தொடங்க உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் கூறியுள்ளது பின்வருமாறு:-

ஆணுக்கிங்கே பெண் நிகா் என்னும் சமத்துவப் பாதையில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விதமாக கலைஞா் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த 21 வயது நிரம்பிய பெண் ஒருவா் விண்ணப்பிக்கலாம். அதாவது 15-09-2002-க்கு முன் பிறந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பதாரா்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவா். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவா் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப தலைவா் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவரது மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயா் ஏதோ ஒரு காரணத்தால் இடம் பெறாமலிருந்தால், அக்குடும்பத்தை சோ்ந்த 21 வயது நிரம்பிய பெண் ஒருவா் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவா்களும் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவா்.

ஒரு குடும்பம் 3 பொருளாதார அளவு கோல்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களும் மற்றும் ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களும் தகுதியானவை.

விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் திட்டச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை இன்று முதல் செயல்பட உள்ளது. விண்ணப்பதாரா்கள் சந்தேகங்கள் மற்றும் திட்டம் தொடா்பான தகவல்களை தொலைபேசி மற்றும் கைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறை குறித்த விபரங்கள் வருமாறு;

தொலைபேசி எண் 1077, கட்செவி- 93840-56213,

திருச்சி மேற்கு வட்டாட்சியரகம்: 0431-2410410, 99943-03340,

திருச்சி கிழக்கு வட்டாட்சியரகம்: 90255-13769, 91595-74256,

திருவெறும்பூா் வட்டாட்சியரகம்: 0431-2555542, 98403-78255.

ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகம்: 0431-2230871, 97866-93013,

மணப்பாறை வட்டாட்சியரகம்: 04332-260576, 86680-84353,

மருங்காபுரி வட்டாட்சியரகம்: 94454-61805, 73970-43456,

லால்குடி வட்டாட்சியரகம்: 0431-2541233, 96264-96544,

மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகம்: 0431-2561791, 81110-75590,

முசிறி வட்டாட்சியரகம்: 04326-260226, 99441-44724,

துறையூா் வட்டாட்சியரகம்: 04327-222393, 90038-18787,

தொட்டியம் வட்டாட்சியரகம்: 96984-72964, 98655-21088.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Tamilnadu #Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment