Advertisment

கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பம் செய்வது எப்படி?

How to apply Tamilnadu Temple trustee in tamil: கோயில்களில் அறங்காவலர் ஆக விருப்பமா? இதோ அற்புத வாய்ப்பு; முழு விவரம் இங்கே…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Updates : சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிப்பு

திருகோயில்களில் அறங்காவலர் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.

Advertisment

தற்போது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் கீழே உள்ள கோவில்களில் அறங்காவலர் பதவிகள் நியமனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளது. 5 பேர் கொண்ட அறங்காவலர் குழுவில் SC அல்லது ST பிரிவில் ஒருவர், பெண் உறுப்பினர் ஒருவரும் நிச்சயம் இடம் பெற வேண்டும். எனவே SC/ST மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

  1. இந்து சமயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. ஆன்மீக நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்.

பதவிக் காலம் : 2 ஆண்டுகள்

அறங்காவலர் பணிக்கா விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் கிடைக்கும்.

விண்ணப்பபடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்

  1. உங்களது மாவட்டம் மற்றும் தாலுகா,
  2. நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கோவிலின் பெயர்,
  3. உங்களது பெயர், வயது பிறந்த தேதியுடன், தகப்பனார் பெயர், சாதியும், சைவமா வைணவமா என்ற மதப்பிரிவும்,
  4. முகவரி, வசிப்பிடத்திற்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம்,
  5. தொழில், மாத வருமானம்,
  6. கல்வித் தகுதிகள், தாய் மொழி மற்றும் இதர தெரிந்த மொழிகள்,
  7. முழுமையான சொத்து விவரம், வருமான வரி கட்டுதல் தொடர்பான விவரங்கள்,
  8. இதற்கு முன் கோவில்களுக்கு செய்த நன்கொடைகள் மற்றும் அறங்காவலர் பதவி வகித்த விவரங்கள்,
  9. கோவில்களுக்கான கட்டண நிலுவை மற்றும் வேறு கடன் நிலுவை விவரங்கள்,
  10. குற்றவழக்குகள் தொடர்பான விவரங்கள்,
  11. அரசு ஊழியரா?

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் சமர்பிக்க வேண்டும்.

அறநிலையத்துறை சார்பில் சரிப்பார்க்கப்படும் தகுதிகள்

விண்ணப்பித்த பிறகு அறநிலையத்துறை உங்களின், கடந்த 5 ஆண்டுகளில் குடியிருந்த விவரங்கள், அடுத்து குடியேற உள்ள விவரங்கள், மதம் சார்ந்த விவரங்கள், மது, புகைப்பழக்கம் உள்ளவரா?, உண்மையிலேயே ஆன்மிக நம்பிக்கை உள்ளவரா?, முன் அனுபவம், சமூகத்தில் கெட்ட பெயர் இல்லாதவரா?, ஒழுக்க கேடுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரா?, இந்து மதம் அல்லது கோவில்களுக்கு எதிராக செயல்பட்டவரா? போன்ற விவரங்களை சரிபார்க்கும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஏறத்தாழ 40000 கோவில் உள்ளன. இவற்றில் தலா 5 பேர் என அறங்காவலர்களாக நியமிக்கப்படும் நிலையில் சுமார் 2 லட்சம் பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம் பெற வாய்ப்பு உண்டு.

எனவே கோவில் பணிகளில் நாட்டம் உள்ளவர்கள் இந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Temple Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment