அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பு. சுமார் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான வாய்ப்பு வந்துள்ளது. டி.என்.பி.எஸி குரூப் 4 தேர்வுகளை அறிவித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியாளராவதற்கான டிப்ஸை, சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனர் ச.சரவணன் ஐபிஎஸ் தருகிறார்.
கடந்த 14-11-2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 9351 குரூப் 4 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானது. வயது வரம்பு மற்றும் பிற விபரங்களை விளம்பரத்தில் பார்க்கவும்.
செய்ய வேண்டியவை:
TNPSC விளம்பரத்தை முழுமையாக படித்து பார்த்து உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். துளியும் காலதாமதம் கூடாது.
கடந்த ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள்களை வாங்கி படித்து கேள்விகளின் தன்மை அறிதல்.
புதிய பாடத்திட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப தயாராகுங்கள்.
மொழித்தாளுக்கு முக்கியத்துவம் அளித்து 100க்கு 100 வாங்க முயற்சிக்க வேண்டும். மொழித்தேர்வுக்கும், பொதுஅறிவுக்கும் ஒரே மதிப்பெண் என்பதை உணரவும்.
நாளிதழ் வாசிப்பு கட்டாயம். தினத்தந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்கள் தினசரி கேள்வி பதில் வெளியிடுவது நீங்கள் படிக்கத்தான்.
ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களுடன் இணைந்து படிப்பது பலனளிக்கும்.
போட்டித் தேர்வு மையத்தில் சேர முடியாதவர்கள் மாவட்ட மைய நூலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
வாரந்தோறும் ராவின் மற்றும் மாதிரித் தேர்வு எழுதுவது பயனளிக்கும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது
குறுக்கு வழிகளை தேடுவது. 100% ஏமாற்று வேலை.
தேர்வு எழுதும் வரை சினிமா, கிரிக்கெட், கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு என அனைத்திலும் கலந்து கொள்வதை தவிர்ப்பது.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்லிருந்து ஒதுங்குவது.
அரசு வேலையா? உனக்கா? என தன்னம்பிக்கை குலைப்பவர்களிடமிருந்து தள்ளியிருப்பது.
TNPSC அறிவிப்பு கிடைத்தற்கரிய வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். யாருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
பாதங்கள் நடக்க தயாராக இருந்தால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை.