இனி நீங்க கண்ணுக்கு போடும் காஜலை வீட்டில் செய்ய முடியும். இது மிகவும் இயற்கையானது என்பதால் நமது கண்களுக்கு எரிச்சல் ஏற்படாது. இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
இதற்கு தேவையான பொருட்கள் 2 ஸ்பூன் நல்லெண்ணை, 5 பாதம் அல்லது 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் , 1 டேபிள் ஸ்பூன் விளக்கு எண்ணெய், மெழுகுவர்த்தி தேவைப்படும்.
நீங்கள் பாதமை பயன்படுத்தினால் அதை இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்துகொள்ளவும். பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தினால் இதை செய்ய வேண்டாம். பாதாம் எண்ணெய், நல்லெண்ணையை கலக்க வேண்டும். தொடர்ந்து விளக்கெண்ணையும் கலந்துகொள்ள வேண்டும். இதை ஒரு சிறிய பாத்திரத்தில் மெழுகுவர்த்தி தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்.
தற்போது எரிந்ததால் கிடைத்த காஜோலை நாம் ஒரு துணிப்பட்டையில் மாற்ற வேண்டும். தொடர்ந்து அந்த துணிப்பட்டையை தீக்குச்சி தீயில் எரியவிட்டு, அதை காற்று உள் நுழையா பாட்டிலில் போடவும். இதை நாம் நினைத்த நேரத்தில் பயன்படுத்திகொள்ளலாம்.