Corona CM Relief Fund: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நீங்கள் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எவ்வாறு பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
Advertisment
செக் (Cheque) மூலமாகவோ அல்லது வரைவோலை (Demand Draft) மூலமாக பணத்தை நீங்கள் பங்களிப்பாக செலுத்தலாம். செக் மற்றும் வரைவோலையை “Chief Minister's Public Relief Fund” என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான ஏதேனும் கடித போக்குவரத்துக்கு
நீங்கள் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதி (CMPRF) சேமிப்பு கணக்குக்கும் Indian Overseas Bank, Secretariat Branch, Chennai 600009, Tamil Nadu, India நேரடியாகவும் அனுப்பலாம்.
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
S.B. A/c No. : 11720 10000 00070
IFS Code : IOBA0001172
CMPRF PAN : AAAGC0038F
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G ன் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலம் பங்களிப்பு செய்யும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்பி வைக்க கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த ரசீது வருமான வரி விலக்கு பெற அவசியம் தேவைப்படும்.
பங்களிப்பு வழங்கும் நபரின் பெயர்:
பங்களிப்பு செய்துள்ள தொகை :
வங்கி மற்றும் அதன் கிளை:
Date of Remittance :
Transaction Ref No. :
தொடர்புக்கான முகவரி :
மின்னஞ்சல் முகவர் :
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil