முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க விருப்பமா? – ஸ்டெப்ஸ் இதோ

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G ன் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்.

By: March 30, 2020, 5:47:27 PM

Corona CM Relief Fund: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நீங்கள் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எவ்வாறு பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.


செக் (Cheque) மூலமாகவோ அல்லது வரைவோலை (Demand Draft) மூலமாக பணத்தை நீங்கள் பங்களிப்பாக செலுத்தலாம். செக் மற்றும் வரைவோலையை “Chief Minister’s Public Relief Fund” என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான ஏதேனும் கடித போக்குவரத்துக்கு

The Joint Secretary & Treasurer

Chief Minister’s Public Relief Fund

Finance (CMPRF) Department

Government of Tamil Nadu

Secretariat, Chennai 600 009

Tamil Nadu, INDIA

e-mail: jscmprf@tn.gov.in

என்ற முகவரியில் மேற்கொள்ளலாம்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பித்து உள்ளீர்களா? – இதோ இவர்களுக்கு எல்லாம் அனுமதி

நீங்கள் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதி (CMPRF) சேமிப்பு கணக்குக்கும் Indian Overseas Bank, Secretariat Branch, Chennai 600009, Tamil Nadu, India நேரடியாகவும் அனுப்பலாம்.

Bank : Indian Overseas Bank

Branch : Secretariat Branch, Chennai 600 009

S.B. A/c No. : 11720 10000 00070

IFS Code : IOBA0001172

CMPRF PAN : AAAGC0038F

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G ன் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலம் பங்களிப்பு செய்யும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்பி வைக்க கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த ரசீது வருமான வரி விலக்கு பெற அவசியம் தேவைப்படும்.

பங்களிப்பு வழங்கும் நபரின் பெயர்:

பங்களிப்பு செய்துள்ள தொகை :

வங்கி மற்றும் அதன் கிளை:

Date of Remittance :

Transaction Ref No. :

தொடர்புக்கான முகவரி :

மின்னஞ்சல் முகவர் :

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:How to donate fund cm public relief fund

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X