தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த முறை இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) தேர்தல் ஆணையம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதனால் பலரும் தற்போது டிஜிட்டர் அட்டையை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை PDF பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். மேலும் இது QR Code பயன்பாட்டை கொண்டதாக இருக்கும். இதன்மூலம் வாக்காளர்கள் பதிவு மொபைல் நம்பரை கொண்டு, மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதில் உங்களது மொபைல் நம்பரை பயன்படுத்தி Login செய்த பின்பு E- EPIC என்ற optionஐ கிளிக் செய்யவும்.
இதன் பிறகு தேவையான தகவல்களை கொடுத்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
வாக்காளர் போர்ட்டல் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி அல்லது NVSP ஆகியவற்றிலிருந்து e-EPIC -ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
குறிப்பாக http://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது NVSP: https://nvsp.in/ , Android : https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen ,
iOS : https://apps.apple.com/in/app/voter-helpline/id1456535004 என்ற ஆப்பினை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“