பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு தீபாவளியின் போது கூட இந்தளவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
இது போதாதென்று, தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
பேருந்து எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் தமிழக அரசு சார்பிலும், சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும், மதுரவாயல், பூந்தமல்லி, நசரத் பெட், ஆட்டர் ரிங் ரோடு வழியாக (தம்பரம், பெருங்கலத்தூருக்கு பதிலாக)வண்டலூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும்(ஆந்திரா,தெலுங்கான , தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ) 12.01.2020, 13.01.2020, 14.01.2020 ஆகிய மூன்று நாட்களுக்கு கோயம்பேடு வராமல்
மாதவரம் புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து இயக்கப்படுகிறது.
இருந்தாலும், இந்த நடவடிக்கை சென்னை மக்களுக்கு எத்தகையான நிவாரணங்களை தரும் இன்னும் கேள்வி குறிதான்.
சென்னை எக்மோரில் இருந்து கிளம்பும் அனைத்து வெளி மாவட்டத்திற்கு செல்லும் ரயில்கள் நிரம்பி வழுகின்றன. இதனால், தாம்பரம் செல்லும் அன்றாடம் பயனர்களின் நிலமை மிகவும் கடினமாகி வருகிறது.
கிண்டி,கூடுவாஞ்சேரி, போரூர், வளசரவாக்கம், பூந்தமல்லி, திருமங்கலம், சென்னை சென்ட்ரல், வடபழனி ஆகிய இடங்களில் இந்த ஆண்டும் கடும் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில், வெளியூருக்கு முன்பதிவு செய்த மக்கள் கூட்ட நெரிசலால் சரியான நேரத்தில் பேருந்தை பிடிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கோயம்பேடு செல்ல சில மாற்று வழிகள் :
மைலாடுதுறை, கும்பகோணம் (ஈ.சி.ஆர் வழியாக), விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, எர்ணாகுரூம், ஊட்டி, பெங்களூர் போன்ற ஊருகளுக்கு செல்வோர்களுக்கு மட்டும் சென்னை கோயம்பேட்டில் பஸ் போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
மேலும், விவரங்களுக்கு கோயம்பேடு திணறுகிறது: சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்
இதனால் சென்னை கோயம்பேடு நிலையத்திற்கு செல்ல மாநகர போக்குவரத்தை மட்டும் நம்பாமல், ரேபிடோ பைக் செயலி, ஓலா செயலி போன்றவைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இருந்தாலும், இவைகளில் அடுத்த மூன்று நாட்ககளுக்கு கூடுதல் கட்டணம் இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வடபழனி, சென்னை சென்ட்ரல், நந்தனம், ஆலந்தூர், திருமங்கலம், அரும்பாக்கம் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மெட்ரோ ரயிலில் செலவுகள் முன்பின்ன இருந்தாலும், தற்போதைய கூட்ட நெருசலை சமாளிக்க இது ஒரு வரபிரசாதமாகவே கருதப்படுகிறது.
மெட்ரோ ரயிலின் மூலம் நீங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நேராக செல்லலாம் என்றும் கூடுதல் சிறப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.