Tips to Reduce Electricity Bill at Home: மின் கட்டணம் உயர்த்தி பிறகு, வீடுகளில் இன்னும் கூடுதலான தொகை மின் கட்டணமாக வருவதால் பலரும், வீட்டில் மின் கட்டணத்தை எப்படி குறைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறர்கள். வீட்டில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.
தற்காலத்தில், பொதுவாக நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் வீட்டில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி ஆகியவை அவசிமான சாதனங்களாகிவிட்டன. அதே நேரத்தில், இந்த மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால், வீட்டில் இரு மாதங்களுக்குச் சேர்த்து மின் கட்டணம் ரூ 6000 முதல் 8000 வரை வருகிறது. இதனால், நடுத்தர மக்கள் மின் கட்டணத்தைச் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
மின் நுகர்வோர்கள் வீட்டில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியமும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக, வீட்டில் தேவையில்லாத லைட், ஃபேன்களை அணைத்து வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதே போல, வீடுகளில் பழைய குண்டு பல்புகளைப் பயன்படுத்தாதிர்கள், இந்த பழைய குண்டு பல்புகள் அதிகப்படியான மின்சாரத்தைப் பயனபடுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வெப்பம் வீட்டில் ஏசியைப் பயன்படுத்துவதற்கான அழுத்தத்தைம் அதிகரிக்கிறது. அதனால், குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துங்கள்.
இந்த எல்.இ.டி பல்புகள் சாதாரண பல்புகளைவிட 60 முதல் 80 சதவீதம் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த எல்.இ.டி பல்புகள் சாதரண பல்புகளைவிட அதிகம் வெளிச்சம் தருவதோடு, குறைவான மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தருகின்றன. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில், வீட்டில் இரவு நேரங்களில் ஜீரோ வாட்ஸ் பல்ப்கள் பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும்.
அதே போல, வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்.இ.டி பல்புகளும் எல்.இ.டி டியூப் லைட்டுகளும் ஒரே தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டாலும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதிலும் வெளிச்சத்தைத் தருவதிலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
எல்.இ.டி பல்புகளைவிட எல்.இ.டி டியூப்லைட்டுகள் சிறந்தது. வீட்டுத் தேவைக்கு ஏற்ப எல்.இ.டி டியூப் லைட் அல்லது எல்.இ.டி பல்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
அதே போல, அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் 2 மின் சாதனங்கள் என்றால் அது ஏசி, பிரிட்ஜ்தான். அதனால், பிரிட்ஜை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அது எப்படி என்றால், அடிக்கடி பிரிட்ஜை திறந்து திறந்து மூடாமல், ஒரே நேரத்தில் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே போல, வாஷிங் மெஷினில் துணிகளை அலசுவதற்கும் டிரை செய்வதற்கும் பயன்படுத்தாமல் மேனுவலாக செய்யலாம். இதை எல்லா நேரமும் செய்ய முடியாவிட்டாலும், நீங்கள் ஓய்வாக இருக்கும்போது செய்யலாம்.
அதே போல, வீட்டில், ஏசி 24 மணி நேரமும் பயன்படுத்தாமல், தேவையானபோது மட்டும் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் நிறுத்தி வைத்துவிடலாம். உங்கள் வீட்டில் ஏசி இருக்கிறது என்றால் கட்டாயம் ஸ்டெபிலைசர் உபயோகிக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் ஏசியை ஆஃப் செய்து விடலாம். அதே போல, ஏசி அறையில் ஃபேன் போடாதீர்கள்.
வீட்டில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் உங்களுக்கு தேவையான அளவு மட்டும் சூடுபடுத்துங்கள். அதிகம் சூடாக்கி வீணாக்க வேண்டாம். இந்த சின்ன சின்ன டிப்ஸ்களை பயன்படுத்தினால், நிச்சயமக உங்கள் வீட்டில் ஓரளவு மின் கட்டணத்தைக் குறைக்கலாம். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.