தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 6) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் 100% வாக்குப்பதிவை நோக்கி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வரவழைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஊபர் நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர்களை வாக்கு பதிவு மையத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பெருநகர வாக்காளர்களிடம் உள்ள சங்கடம் என்னவெனில் நமக்கான வாக்கு பதிவு மையம் எங்கு உள்ளது? எப்படி போவது? என்று தெரியாததாகும். இப்பிரச்சனையை தீர்க்க தேர்தல் ஆணையம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. வாக்காளர் தான் வாக்களிக்க வேண்டிய வாக்குபதிவு மையத்தை தேர்ந்தெடுத்தால், கூகுள் மேப்ஸ் வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள இடத்தை காண்பிப்பதோடு, அங்கு எந்த பாதை வழியாக செல்ல வேண்டும் என்ற எளிய வழியையும் காண்பிக்கும்.
இதற்கு நீங்கள் தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கத்திற்குச் சென்று, ”Search polling location online by Election Commission of India” என்பதை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து பின் மாவட்டம், உங்கள் சட்டமன்ற தொகுதி, உங்கள் வாக்குப்பதிவு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குப்பதிவு மையத்தின் அமைவிடம் திரையில் தெரியும். இப்பொழுது எளிதாக நீங்கள் அங்கு சென்று வாக்களிக்கலாம்.
இதற்கான லிங்க் இதோ…
அனைவரும் வாக்களிப்போம்! நம் சமூக கடமையை ஆற்றுவோம்!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil