ரூ47 கோடியில் 3 முதியோர் இல்லம் கட்ட திட்டம் – இந்து அறநிலையத் துறை

சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆதரவற்றோர்களுக்கு மூன்று முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தை இந்து அறநிலையத் துறை உறுதி செய்துள்ளது.

HR & CE confirms to construct 3 elderly homes, three elderly homes in Chenai Palani Nellai, HR CE, Minister Sekar Babu, ரூ47 கோடியில் 3 முதியோர் இல்லம் கட்ட திட்டம், சென்னை, பழனி, திருநெல்வேலி, இந்து அறநிலையத் துறை அறிவிப்பு, elderly homes, HR CE department

இந்து சமய அறநிலையத் துறை ரூ. 47 கோடி செலவில் பழனி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஆதரவற்றோர்களுக்கு மூன்று முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தை உறுதி செய்துள்ளது.

இந்து அறநிலையத் துறை, சில மாதங்களுக்கு முன்பு 6 கல்லூரிகளை அமைப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, பழனி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஆதரவற்றோர்களுக்கு மூன்று முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தை இந்து அறநிலையத் துறை உறுதி செய்துள்ளது.

சென்னையில் அமைய உள்ள முதியோர் இல்லம் வில்லிவாக்கத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 19.1 கோடி ரூபாய் செலவிலும், திருநெல்வேலியில் 2.86 ஏக்கர் பரப்பளவில் 13.15 கோடி ரூபாய் செலவிலும் பழனியில், 1.72 ஏக்கர் பரப்பளவில் 15.2 கோடி ரூபாய் செலவில முதியோர் இல்லம் கட்டப்படும் என இந்து அறநிலையத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெள்ளிக்கிழமை முதியோர் இல்லம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை ஆய்வு செய்தார். இந்த முதியோர் இல்லங்களில் தியான மண்டபம், உணவருந்தும் கூடம், பார்வையாளர்கள் கூடம், பொழுதுபோக்கு வசதிகள், தோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.

கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது காவல்துறாஇ வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு உயர் அதிகாரிகளுக்கு இந்து அறநிலையத் டுறை ஆணையர் ஜே குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக புகார் அளித்து போராடுபவர்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.47 கோடி செலவில், சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆதரவற்றோர்களுக்கு மூன்று முதியோர் இல்லம் கட்டும் திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hr ce confirms to construct 3 elderly homes in chenai palani and nellai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express