/tamil-ie/media/media_files/uploads/2022/12/Coimbatore-1-1.jpg)
கோவை, உக்கடம் கோட்டை மேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் இருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக கட்டடத்தை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை மாவட்டம், தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டடம், நீண்ட நாட்கள் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-22-at-1.53.16-PM.jpeg)
பல்வேறு எச்சரிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பின், புதன்கிழமை (டிசம்பர் 21) கோட்டை பெருமாள் கோவில் வீதி, இரண்டாவது வார்டில், 22வது 211 கதவு கோவை நகர்ப்புற அளவை எண் பிளாக்கில், எண்ணில், 1309/2ல் உள்ள, 4,500 சதுர அடியுள்ள இந்த வணிக கட்டடம், நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
கோட்டை கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக கட்டடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளால் நேற்று மீட்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Coimbatore-1-2.jpg)
இது குறித்து, கோவை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த கோவிலுக்கு சொந்தமான வணிக கட் டடம், நீண்ட நாட்களாக குத்தகைதாரர் அல்லாமல் மூன்றாம் நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக் குப்பின், அந்த வணிக கட்டடம் கோவிலின் கட்டுப்பாட்டுக்கு வரப்பட்டுக்கு கொண்டு அடி விஸ்தீரணமுள்ள வணிக கட்டடத்தின் தற் போதைய சந்தை மதிப்பு, 6 கோடி ரூபாய்” இவ்வாறு அவர் தெரிவித்தார்
கோவை மண்டல இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையில், கோட்டை கரிவரத ராஜ பெருமாள் சாமி கோவில் செயல் அலுவலர் சரவணக்குமார் ஆகியோர், மீட்பு நடவடிக்கையின்போது உடனிருந்தனர்.
செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.