தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், வாடகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
2,390 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள வாடகையை வசூலிப்பது தொடர்பான மனுவை, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்து வருகிறது.
காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர், ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து கோயில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்கள் மற்றும் வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த தகவல்கள், விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆணையர், இதுவரை நான்கு லட்சம் சொத்துக்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆணையரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள், அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், அறிக்கை தாக்கல் செய்ய ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil