/indian-express-tamil/media/media_files/9ArUxpPSw9Hk0DZdxlXi.jpg)
மயிலாப்பூரில் கோவில் இடத்தில் திறந்த பா.ஜ.க அலுவலகத்துக்கு சீல்
சென்னை மயிலாப்பூரில், ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பா.ஜ.க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்து இந்து அறநிலையத்துறை இந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில், ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், மக்களவைத் தேர்தலையொட்டி, பா.ஜ.க அலுவலகம் திறக்கபட்டது.
மயிலாப்பூரில், ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், ரியல் எஸ்டேட் அலுவலகம் வைப்பதாகக் கூறி, வியாழக்கிழமை (08.02.2024) பா.ஜ.க கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை வணிக ரீதியான பயன்பாட்டுக்காக வாடகைக்கு வாங்கி அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால், விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, மயிலாப்பூரில், ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பா.ஜ.க அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட இணைய ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனர். கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க அலுவலகம் திறக்கப்பட்டு 2-வது நாளே இந்து அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.