Advertisment

Tamil Nadu news today updates: 'ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் எழுதலாம்' - ரயில்வே வாரியம் விளக்கம்

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி மேகாலாய உயர் நீதிமன்றத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனிடையே, தஹில் ரமணியை பணியிடை மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தஹில் ரமணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை வீழ்த்தி  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 19வது பட்டத்தை வென்றுள்ளார்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.51-க்கும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.68.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

 Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines, தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:35 (IST)09 Sep 2019

    அண்ணாமலை பல்கலை., 2ஆம் ஆண்டு மாணவி மீது ஆசிட் வீச்சு

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. 2ஆம் ஆண்டு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீச்சு

    ஆசிட் வீசிய மாணவர் முத்தமிழனை பிடித்து சக மாணவர்கள் அடித்து உதைத்ததில் அவரும் படுகாயமடைந்தார்

    படுகாயமடைந்த 2 பேருக்கும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    22:34 (IST)09 Sep 2019

    சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம்

    ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும்

    முதல்வர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மிக மிக பெரிய வெற்றி

    சிறுகதை, நாவல் பிரிவில் கல்கி பெயரில் விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

    20:15 (IST)09 Sep 2019

    குடிமராமத்து பணிகளை திசை திருப்பவே தூர்வாரும் பணிகளை திமுக கையில் எடுத்துள்ளது

    தமிழக அரசு மேற்கொண்டு வரும் குடிமராமத்து பணிகளை திசை திருப்பவே தூர்வாரும் பணிகளை திமுக கையில் எடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் பழனிசாமி முயற்சித்து வருகிறார், இதை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

    20:14 (IST)09 Sep 2019

    26 போலி மருத்துவர்கள் கைது

    வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 26 போலி மருத்துவர்கள் கைது - ஆட்சியர் சண்முகசுந்தரம்

    அனைத்து துறைகளிலும் இதுபோன்று சோதனைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

    20:10 (IST)09 Sep 2019

    தமிழ் மொழிக்காக திமுக தொடர்ந்து உறுதியுடன் போராடும்

    'தமிழ் மொழிக்காக திமுக தொடர்ந்து உறுதியுடன் போராடும்'

    ரயில்வே தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

    - மு.க.ஸ்டாலின்

    20:09 (IST)09 Sep 2019

    ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்

    ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வு கேள்வித்தாளை ஆங்கிலம், இந்தியில் தயாரிக்க உத்தரவு என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    20:06 (IST)09 Sep 2019

    பாட் படையினர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

    காஷ்மீரில் இந்திய எல்லையில் கேரன் பகுதியில் ஆகஸ்ட் மாதம் பாட் படையினர் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    19:23 (IST)09 Sep 2019

    குடிபோதையில் வாகனம் - 25.10 லட்சம் வசூல்

    குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக செப்.1 முதல் செப்.8 வரை 251 பேரிடம் ரூ.25.10 லட்சம் வசூல்

    போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

    - மதுரை போக்குவரத்து காவல்துறை

    19:22 (IST)09 Sep 2019

    இந்து சமய அறநிலைய துறையின் கூடுதல் ஆணையருக்கு ஜாமீன் ரத்து

    சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை கடத்தல் வழக்கில் சஸ்பெண்டான இந்து சமய அறநிலைய துறையின் கூடுதல் ஆணையர் திருமகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்மாணிக்கவேலின் கோரிக்கையை ஏற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ரத்து செய்தது

    19:21 (IST)09 Sep 2019

    முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்

    ப.சிதம்பரம் கைதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    18:43 (IST)09 Sep 2019

    புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. 

    18:42 (IST)09 Sep 2019

    மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல

    பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    18:41 (IST)09 Sep 2019

    மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க அறிவியல் ரீதியான விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

    மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க அறிவியல் ரீதியான விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகார வரம்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    18:37 (IST)09 Sep 2019

    கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை

    கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 850 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

    18:30 (IST)09 Sep 2019

    மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் - 70,900 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 70,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    17:19 (IST)09 Sep 2019

    தெற்கு ராணுவ தளபதி எஸ் கே சைனி

    குஜராத்தின் ரான் ஆப் கேட்சில் உள்ள சர் க்ரீக்கில் கைவிடப்பட்ட படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்திய உளவுத்துறை தென்னிந்தியாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்று பயங்கரவாத எச்சரிக்கை விடுத்துள்ளதாக  தெற்கு ராணுவ தளபதி எஸ் கே சைனி தெரிவித்தார்.

    அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார். கடல் வழியாய் தென் இந்தியாவை தாக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் தெரிவித்தார்.      

    16:41 (IST)09 Sep 2019

    மைக்கேல் பேச்லெட் ஜெரியா பேச்சு:

    இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்று ஐ. நா மனித உரிமை அலுவலகத் தலைவர் மைக்கேல் பேச்லெட் ஜெரியா  தெரிவித்துள்ளார். 

    இது குறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில்  இணைய தொடர்புகள் கட்டுப்படுத்திய விதமும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிறைப் பிடித்ததும் தவிர்க்கப் பட வேண்டும் , மனித உரிமைகைள் பாதுகாக்கப்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   

    15:55 (IST)09 Sep 2019

    அசோக் லேலாண்ட் உற்பத்தி நிறுத்தம்

    இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் தனது உற்பத்தி இல்லாத நாளை அறிவித்துள்ளது. ஆடோமொபைல் துறையில் மந்தமான சூழ்நிலை உருவாகி வருவதால் பல தொழிற்சாலைகள் உற்பத்தி இல்லாத நாளை அறிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிட்டத் தக்கது.        

    அசோக் லேலாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

    என்னூரில் - 16 நாட்கள், ஓசூர் (தமிழ்நாடு) - ஐந்து நாட்கள், ஆல்வார் (ராஜஸ்தான்) மற்றும் பண்டாரா (மகாராஷ்டிரா) பிரிவில் தலா 10 நாட்கள்

    பந்த்நகர் (உத்தரகண்ட்) - 18 நாட்கள்

    இந்த மாதத்தில் உற்பத்தி இல்லாத நாளாக இருக்கும்.  

    15:18 (IST)09 Sep 2019

    காங்கிரஸ் உட்கட்சி மோதல்:

    மத்திய பிரதேசத்தில் கட்சியின் தலைவராக யார் இருப்பார்கள் என்பது குறித்து காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள் மோதலை சமாளிப்பதற்காக

    சோனியா காந்தி ஜோதிராதித்ய சிந்தியாவை நாளை சந்திக்கிறார். நாளை மறுநாள் மத்திய பிரேதச முதல்வர் கமல் நாத்தையும் சந்திக்கிறார். கடந்த சில நாட்களாகவே இரு தரப்பினர்களை சேர்ந்தவர்களும் கட்சித் தலைவர் பதவியைப் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    13:39 (IST)09 Sep 2019

    டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

    ஊடகங்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: டெங்குவால் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    13:21 (IST)09 Sep 2019

    ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவீட்: எந்த அரசு அதிகாரியும் தவறு செய்யவில்லை

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதன் பேரில் அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் சார்பில் குடும்பத்தினர் ஒரு டுவிட் செய்துள்ளனர். அதில் “மக்கள் சிலர் என்னைப் பார்த்து இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை முன்மொழிந்த அரசு அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது கடைசியாக கையெழுத்துப் போட்ட நீங்கள் மட்டும் எவ்வாறு கைது செய்யப்பட்டீர்கள் என்று கேட்கின்றனர். ஆனால், எந்த அரசு அதிகாரியும் தவறு செய்யவில்லை அவர்கள் யாரும் கைது செய்யப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    13:08 (IST)09 Sep 2019

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல, நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    13:01 (IST)09 Sep 2019

    நீதிபதி தஹில் ரமணி ராஜினாமாவை கைவிட்டு பணிகளை தொடர வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஜினாம கடிதம் அனுப்ப்பினார். இந்த சூழலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை சந்தித்தார். அப்போது, தஹில் ரமணியின் ராஜினாமா முடிவை கைவிட்டு வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    12:47 (IST)09 Sep 2019

    ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற வெள்ள அபாய எச்சரிக்கை

    ஆந்திராவில் கோதாவரி ஆற்றிலும், கர்நாடகாவில் காவிரியிலும், உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றிலும், பிகாரில் பாக்மதி மற்றும் கோசி ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய நீர் ஆணையம் ஆரஞ்சு நிற வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது. மகாராஷ்ட்ராவில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருவதை அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .

    12:43 (IST)09 Sep 2019

    விமானிகள் போராட்டம்; பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவைகள் ரத்து

    விமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    12:40 (IST)09 Sep 2019

    மதுரையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் ராஜினாமா கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து மதுரையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    12:36 (IST)09 Sep 2019

    நாட்டின் காடுகள் பரப்பளவு 8 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு

    டெல்லியில் நடைபெறும் ஐ.நா கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி: 2015 - 2017க்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் காடுகள் பரப்பு 8 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. 2030-க்குள் காடுகளை மீட்டெடுக்கும் இலக்கை 26 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    12:26 (IST)09 Sep 2019

    கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

    கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் 2400 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவிற்கு அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    12:07 (IST)09 Sep 2019

    வாகன விற்பனை குறைந்ததால் எண்ணூரில் 16 நாட்கள் உற்பத்தி நடைபெறாது - அசோக் லேலேண்ட் அறிவிப்பு

    வாகன விற்பனை குறைந்ததால் இம்மாதம் எண்ணூர் உள்பட 5 இடங்களில் 16 நாட்கள் உற்பத்தி நடைபெறாது என்று அசோக் லேலேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    11:50 (IST)09 Sep 2019

    தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது - திமுக எம்.பி டி.ஆர். பாலு

    செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர். பாலு, “தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்கள் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்

    11:28 (IST)09 Sep 2019

    ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்

    பாமக நிறுவன ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

    10:58 (IST)09 Sep 2019

    நீதிபதி தஹில் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா கடிதம் அளித்ததைத் தொடர்ந்து அவரை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.

    10:21 (IST)09 Sep 2019

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி அமர்வில் இன்று விசாரணை இல்லை

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமணி கோரியது நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடித்தை அனுப்பினார். ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தஹில் ரமணி அமர்வில் இன்று விசாரணை இல்லை.

    10:18 (IST)09 Sep 2019

    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 67,931 கனஅடி நீர் திறப்பு

    கர்நாடகாவில் மழைபொழிவு காரணமாக அம்மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவான 120.80அடியை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 42,931 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    10:14 (IST)09 Sep 2019

    டெல்லியில் ராம்ஜெத்மலானி மறைவுக்கு திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சென்று ஆறுதல்

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் மறைவைஅடுத்து, திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் டெல்லியில் ராம்ஜெத்மலானி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

    10:10 (IST)09 Sep 2019

    நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி

    முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் பழனிசாமி நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.

    09:59 (IST)09 Sep 2019

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு

    இமானுவேல், முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 25 முதல் 31-ஆம் தேதி வரையில் பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

    09:43 (IST)09 Sep 2019

    திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் குளங்களை தூர்வார திட்டம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    திருவாரூரில் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்: திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் குளங்களை தூர்வார திட்டமிட்டுள்ளோம். திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 14-ல் நடைபெற உள்ளது என்று கூறினார்.

    09:38 (IST)09 Sep 2019

    அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு ஆகியும் விடுதலை செய்ய தாமதமேன்? என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - அற்புதம்மாள்

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது டுவிட்டர் பக்கத்தில் “அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு ஆகியும் நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே! 29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!” என்று கோரியுள்ளார்.அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டுநிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே!29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!#29YearsTooMuchGovernor pic.twitter.com/jffwQTpO92— Arputham Ammal (@AmmalArputham) September 9, 2019

    09:20 (IST)09 Sep 2019

    நீதிபதி தஹில் ரமணியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு; நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கங்கள் முடிவு

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை, இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

    09:06 (IST)09 Sep 2019

    திருவாரூரில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்

    திருவாரூர் மாவட்டம், நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல் குளத்தை தூர்வாரும் பணியை உதயநிதி ஸ்டாலின் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணியில் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், ஆடலரசன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    09:00 (IST)09 Sep 2019

    விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி

    விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கி.மீ. தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu news today live updates: தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார். அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன், தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர், ராம் ஜெத்மலானி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    Tamilnadu Tamilnadu Weather Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment