/tamil-ie/media/media_files/uploads/2023/07/Human-Chain-Protest.jpg)
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கோயம்புத்தூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைக்கும், பெண்கள் பாதுகாப்பின்மைக்கும் காரணமான பாஜக அரசை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக அனைத்து முற்போக்கு - ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் ,காங்கிரஸ், எஸ்டிபிஐ, புரட்சிகர இளைஞர் இயக்கம் உட்பட 15-க்கு மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மனித சங்கிலி போராட்டத்தின் போது மணிப்பூரில் அமைதி நிலவவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எனவும் வலியுறுத்தபட்டது.
80"நாட்களாக ஒரு மாநிலம் பற்றி எரிகின்றது, கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்
தீ வைத்து எரிக்கபட்டுள்ளதுபெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு அவமானபடுத்தபடுகின்றனர் எனவும் இதை தடுக்கவோ ,அமைதியை ஏற்படுத்தவோ,அரசியல் ரீதியாக பதில்சொல்ல மோடி தலைமையிலான மத்திய அரசோ, அமித்ஷாவோ தயாராக இல்லை.
அமைதி காக்க தவறிய மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்,பொருள் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்திய நாடே மணிப்பூர் ஒற்றுமையை விரும்புகின்றது எனவும் மனிதசங்கிலியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.