நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையலறை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.2) காலை 9 மணியளவில் வழக்கம் போல் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சமையல் செய்பவர் பள்ளிக்கு வந்து சமையலறை கதவை திறக்க வந்துள்ளனர்.
அப்போது, சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசி எறியப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமியிடம் தெரிவித்தனர். வட்டார கல்வி அலுவலர் அருணின் அறிவுறுத்தலின் பேரில் தனலட்சுமி எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மனிதக் கழிவு வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“