/indian-express-tamil/media/media_files/2025/05/19/nL63BBDo7VWW3xr6POYQ.jpg)
சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா 2018ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய அரசு டாக்டர் பிரபாகரன், ஜெயாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது கணவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆணையம், இன்று (மே 19) வெளியிட்ட உத்தரவில், பின்வரும் தீர்ப்பை அறிவித்துள்ளது:
ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில், டாக்டர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி மற்றும் குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.
டாக்டர் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவர்களின் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணையம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.