நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கொடு மூலம் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனல் உள்ள ஆப்களை பயன்படுத்தி கியூஆர் கோடு மூலம் எளிதில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இந்த முறையில் பணிகளுக்கும், கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கும் சில்லறை பிரச்சனை ஏற்படாது.
இந்த கியு- ஆர் கோடு வசதியானது மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், ராஜாபாளையம், சகரன்கோவில், நாசரேத், திருச்சந்தூர், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் செயல்பட்டில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“