Advertisment

கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு ரமலான் தொழுகை: திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் இன்று சிறப்பு ரமலான் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramzan prayer

Ramzan prayer

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் இன்று (ஏப்ரல் 21) ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

publive-image

ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். 30 நாட்கள் நோன்பு இருந்து வானில் பிறை தென்படும் நாள் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

publive-image

அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாளில் ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. அந்த வகையில் இன்று ஜாக் கமிட்டி சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை சனிக்கிழமை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment